எகிப்து நாட்டின் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை
முகமது முர்சி
எகிப்து நாட்டில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரைப் பெற்றவர் முகமது முர்சி. ஆனால்
அவரது மக்கள் நல கொள்கைகளால், அவருக்கு எதிராக கார்பொரேட் ராணுவ கிளர்ச்சி
வெடித்தது. இதையடுத்து கடந்த 2013–ம் ஆண்டு அவர் ஆட்சியில் இருந்து
அகற்றப்பட்டார். இந்த நிலையில் 2011–ம் ஆண்டு, அப்போதைய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின்போது ஜெயில் உடைப்பில்
ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 128 பேர் மீதும் தொடரப்பட்ட
வழக்கில் கெய்ரோ ராணுவத்திற்கு ஆதரவான கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
மரண தண்டனை
முர்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து
நீதிபதி ஷபான் அல் ஷமி தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை பெற்றவர்களில்,
முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பின் தலைவர் முகமது பதீஃ, துணைத்தலைவர் கைரத்
அல்–ஷேட்டர், இஸ்லாமிய மத அறிஞர் யூசுப் அல்–கர்ளாவி ஆகியோரும் அடங்குவர். இந்த
தண்டனையை உறுதி செய்வதற்காக, அந்த நாட்டு வழக்கத்தின்படி, ‘கிராண்ட்
முப்தி’ என்னும் முஸ்லிம் மத தலைவர்களை கொண்ட அமைப்புக்கு நீதிபதி வழக்கை
அனுப்பி வைத்தார். அந்த அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு கூட குற்றவாளிகள்(!)
அப்பீல் செய்யலாம். ‘முப்தி’ அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு, ஜூன் 2–ந்தேதி, இவ்வழக்கில் கோர்ட்டு தனது இறுதி முடிவை அறிவிக்கும்.
முஷ்டியை உயர்த்தினார்
நீதிபதி தீர்ப்பு அளித்தபோது, முர்சி தனது எதிர்ப்பை தெரிவிக்கும்
விதமாக கை முஷ்டியை உயர்த்திக் காண்பித்தார். அவர், குற்றவாளிகளுக்கான நீல
நிற சீருடையுடன் கூண்டில் அமர்ந்திருந்தார்.
முர்சி விரும்பினால், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்று அவருடைய வக்கீல் அப்துல் மோனிம் தெரிவித்தார். 2012–ம்
ஆண்டு அதிபர் மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அடக்க
உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முர்சி, ஏற்கனவே 20 ஆண்டு சிறைத்தண்டனை
அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்து அரசை
கவிழ்க்க வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்ததாக முர்சி உள்ளிட்ட 19 பேருக்கு
எதிராக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், ஜூன் 2–ந்தேதி கோர்ட்டு தீர்ப்பு
அளிக்கிறது. (அவருதானையா அப்ப அரசாங்கம் னு நீங்க சொல்றது கேக்குது)
3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
இந்நிலையில், கெய்ரோ கோர்ட்டில், முர்சிக்கு எதிராக தீர்ப்பு
அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு
சினாய் மாகாண தலைநகர் எல்–அரிஷில், ஆயுதம் தாங்கிய ஒரு மர்ம கும்பல்,
நீதிபதிகளை குறிவைத்து துப்பாக்கி தாக்குதல் நடத்தியது. இதில், 3
நீதிபதிகள் பலியானார்கள். மேலும் இரண்டு நீதிபதிகள் காயம் அடைந்தனர். முர்சியுடன்
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சிலர் சினாய் மாகாணத்தைச் சேர்ந்த
தீவிரவாதிகள் ஆவர். எனவே, அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கண்டனம்
இதற்கிடையே, முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதித்தற்கு
‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் எதிரிகளை
பழிதீர்க்க மரண தண்டனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. துருக்கி
நாட்டு அதிபர் ரெசிப் தய்யிப் எர்டோகனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கற்கால எகிப்துக்கு நாடு திரும்பி வருவதாகவும், மேலை நாடுகள் கண்ணை மூடிக்
கொண்டிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
We with mursi...
பதிலளிநீக்கு