புதன், 22 ஜூலை, 2015

அன்பிற்க்கினியவர்களே அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

மாணவ சமுதாயதிற்கு வழிகாட்ட யாருமே இல்லையே என்னும் போதுதான்விடிவெள்ளியாய் தோன்றியது sio. 

19  அக்டோபர் 1982 ல் நாட்டில் மூளை முடுக்கில் இருக்கும் இளைஞர்கள் இஸ்லாத்திற்காக உயிர் கொடுக்க மாடுமன்று போராடவும் இஸ்லாமிய முறைப்படி வாழவும் உறுதி மொழி எடுத்துக்கொன்டனர் அறிவுசார் வசந்தத்தை ஏற்படுத்த  நினைத்த sio கால் நூற்றாண்டிற்குள்ளாகவே மாணவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாய் மாறியது. கடந்த 32 வருடங்களாக இறைத்தூதை முன்னிறுத்தியோ அடையாளத்தை தக்கவைதுக்க் கொண்டிருக்கிறது. கற்களும் முற்களும் நிறைந்த இப்பாதையில் சமூக தீமைக்கு எதிராகவும் அநீதிக்கு எதிராகவும் தன்னுடைய பாதத்தை ஆழமாகவும் பதித்திருக்கிறது sio தேசியப் புனரமைப்பை கனவாய்க் கொண்டு மாணவ இளைஞர்களின் உள்ளதை எழுதி வருகிறது. நாடெங்கும் பறந்து விரிந்து சுமார் 2 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தொடங்கப்பட்ட தளத்திலிருந்தே கோவையிலும் வீரியமாக செயல்பட்டு வருகிறது si

வெள்ளி, 5 ஜூன், 2015

2 ஜூன் 2015 அன்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) கோவையில் நடத்திய  தடையை மீறிய ஆர்பாட்டத்தின் காணொளி
கோவை ஆசாத்நகரில் பூங்காவாக மாறிய குப்பைத்தொட்டி!!!
TASK, ஜமாஅத்தே இஸ்லாமியுடன் இணைந்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) களப்பணி ஆற்றியது.
கோவை பூங்காநகர் கிளைத்தலைவர் சகோ.நவாஸ் தலைமையிலான குழுவினர் ஒத்துழைப்பு வழங்கின

புதன், 3 ஜூன், 2015


தந்தை பெரியார் அம்பேதகர் வாசகர் வட்டத்தினை(APSC) தடைசெய்ததை
கண்டித்து SIO கோவை நடத்தும்
#போராட்டம்

சென்னை ஐ.ஐ.டி கல்வி வளாகத்திற்குள் இயங்கி வரும் தந்தை பெரியார் அம்பேதகர் வாசகர் வட்டத்தினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தடைசெய்ததை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) வன்மையாகக் கண்டிக்கின்றது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக இதுபோன்று பல்வேறு செயல்பாடுகளை சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கெதிராக செய்து வருவது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் செயல் என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கருதுகின்றது.

மோடி அரசின் குறைகளை விமர்சித்ததற்காகவும், பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பரப்பியதற்காகவும் இந்த வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் தாங்கள் சார்ந்துள்ள சித்தாந்த்தை அல்லது அதன் தலைவர்களின் கருத்துக்களை கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ள நிலையில், மத்திய அரசின் இத்தகைய போக்கு கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெருக்குவதாக உள்ளது. மேலும், தன் குறைபாடுகளைக் குறித்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத பலவீனமான அரசாக இன்றைய மத்திய அரசு செயல்படுகின்றது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் நம் நாட்டிற்கு அளப்பரிய பங்காற்றியுள்ளார்கள். இவரகள் இருவரும் உலகளாவிய தலைவர்கள். இவரக்ளைப் பற்றியும், அவர்கள் கூறிய கருத்துக்களைப் பற்றியும் பேசும் போதுதான் நாட்டில் சமத்துவம் உயிர்த்தெழும்; ஜாதியமும், மூட நம்பிக்கைகளும் நம்மைவிட்டு ஒழிந்து போகும்.

இவர்களின் கருத்துக்களை நினைவு கூறுவதன் மூலமே நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல முடியும். இத்தகைய சிந்தனை மற்றும் செயல்பாட்டிற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கெதிராக செய்யப்படும் அநீதி என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கருதுகின்றது.

மேலும் தந்தை பெரியார், அம்பேத்கர் வாசகர் வட்டம் சிறப்புற செயல்படுவதற்கு மத்திய அரசும், ஐ.ஐ.டி கல்வி வளாகமும் அனுமதியளிக்கும்படி இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கேட்டுக் கொள்கின்றது. இதனை வலியுறுத்தி இன்று (2/06/15) மாலை 4:30 மணிக்கு உக்கடத்தில் வைத்து போராட்டம் நடைபெற்றது.நடைகிறது

திங்கள், 1 ஜூன், 2015


எல்லாப் புகழும் இறைவனுக்கே..!


Sio கோவைமாவட்டம் சார்பாக INFORMIX 15 என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கிளையளவில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது கோவை மாவட்ட அளவில் கரும்புக்கடை , அல்அமீன் காலனி , குனியமுத்தூர் , குறிச்சி கிளைகளில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களை மனதளவில் ஊக்குவிக்க உரைகளும் , பல்துறைச் சார்ந்த அறிஞர்களின் அறிவுரைகளும் , கல்வி கண்காட்சியும் நடைப்பெற்றது. இந்நிகழ்வின் முத்தாய்ப்பாய் மாணவர்களின் திறமையை கண்டறியும் சோதனையும் (psychometric test) நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மொத்தமாக 600க்கும் மேற்ப்பட்ட மாணவ , மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
கலந்துக்கொண்ட மாணவர்கள் அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற துறைகளை தேர்ந்தெடுத்து அத்துறைகளில் வெற்றிப் பெற இறைவன் அருள்ப் புரிவானாக..!
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) கோவையின்
மக்கள் தொடர்புச் செயலாளர்
U. முஹம்மத் அலி அவர்கள்
வெளியிடும் பத்திரிகை செய்தி:
கல்வித்துறையில் நிகழும் அநீதி மற்றும் சமநிலையின்மையைக் கண்டித்து
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி வழங்குவது அரசின் கட்டாயக் கடமை. அப்படியான ஒரு திட்டத்தைதான் நாடு விடுதலை அடைந்த தருணத்தில் சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களும் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் அவர்களும் முன் வைத்தனர். வேறு சிலரின் சூழ்ச்சியால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அனைவருக்குமான கல்வி இந்தியாவில் சாத்தியம் இல்லாமல் போயிற்று. 2010ல் மன்மோகன் சிங்கின் தலைமையின் கீழ் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE) நடைமுறைக்கு வந்தது. ஆனால் இதுவரையிலும் மத்திய மாநில அரசுகள் இதை நடைமுறைப்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் நாட்டில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் வேண்டும்.
1:30 என்ற ரீதியில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை ஏற்படிதியிருக்க வேண்டும். இப்படியான ஒரு ஏற்ப்பாடு இருந்தால் தான் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி யோசிக்கவே முடியும். ஆனால், எதனையும் ஏற்படுத்தாமல் சட்டத்தை மட்டும் இயற்றி என்ன பயன்.
இன்னொரு பக்கம் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தனியார் பள்ளிகளில்
ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டினை வாங்கித் தர அரசு ஏற்பாடு செய்தது.
ஆனால், அதற்கான எந்த ஒரு நிதியினையும் மத்திய மாநில அரசுகள் கொடுக்கவில்லை.
வணிக நோக்கில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தனியார் பள்ளிகள் இனி வரும் கல்வி ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. ஆக மொத்தத்தில் கல்வி இலவசமாக வழங்கப்படவில்லை என்பது வெளிப்படையான உண்மை.
ஒரு அரசு தன் நாட்டு மக்களை சிறந்த நிபுணர்களாக மாற்ற கல்வியைத் தரமாக வழங்க வேண்டும்.
அதனை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. கல்வி வழங்குவதை தனியாருக்குத் தாரை வார்த்தால் “பணம் படைத்தோருக்கு மட்டுமே கல்வி” என்ற வணிகமயமாக்கலின் இழிநிலையை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்க வேண்டும் என்பது கண்கூடு.
அரசு பள்ளிகளின் தரத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை கூட்டினால் மட்டுமே அனைவருக்குமான தரமான இலவச கல்வி நடைமுறை சாத்தியமாகும்.
இத்தகைய திட்டங்களை வலியுறுத்தி வருகின்ற 16.05.2015 அன்று காலை 10.30 மணியளவில் உக்கடம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தை  இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO கோவை  நடத்தியது.


நன்றி,
முஹம்மது அலி MBA
செயலாளர்,
மக்கள் தொடர்பு,
SIO கோவை.
தந்தை பெரியார் அம்பேதகர் வாசகர் வட்டத்தினை(APSC) தடைசெய்ததை
கண்டித்து SIO கோவை நடத்தும்
‪#‎தடையை_மீறி_போராட்டம்‬

சென்னை ஐ.ஐ.டி கல்வி வளாகத்திற்குள் இயங்கி வரும் தந்தை பெரியார் அம்பேதகர் வாசகர் வட்டத்தினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தடைசெய்ததை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) வன்மையாகக் கண்டிக்கின்றது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக இதுபோன்று பல்வேறு செயல்பாடுகளை சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கெதிராக செய்து வருவது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் செயல் என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கருதுகின்றது.

மோடி அரசின் குறைகளை விமர்சித்ததற்காகவும், பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பரப்பியதற்காகவும் இந்த வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் தாங்கள் சார்ந்துள்ள சித்தாந்த்தை அல்லது அதன் தலைவர்களின் கருத்துக்களை கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ள நிலையில், மத்திய அரசின் இத்தகைய போக்கு கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெருக்குவதாக உள்ளது. மேலும், தன் குறைபாடுகளைக் குறித்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத பலவீனமான அரசாக இன்றைய மத்திய அரசு செயல்படுகின்றது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் நம் நாட்டிற்கு அளப்பரிய பங்காற்றியுள்ளார்கள். இவரகள் இருவரும் உலகளாவிய தலைவர்கள். இவரக்ளைப் பற்றியும், அவர்கள் கூறிய கருத்துக்களைப் பற்றியும் பேசும் போதுதான் நாட்டில் சமத்துவம் உயிர்த்தெழும்; ஜாதியமும், மூட நம்பிக்கைகளும் நம்மைவிட்டு ஒழிந்து போகும்.
இவர்களின் கருத்துக்களை நினைவு கூறுவதன் மூலமே நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல முடியும். இத்தகைய சிந்தனை மற்றும் செயல்பாட்டிற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கெதிராக செய்யப்படும் அநீதி என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கருதுகின்றது.

மேலும் தந்தை பெரியார், அம்பேத்கர் வாசகர் வட்டம் சிறப்புற செயல்படுவதற்கு மத்திய அரசும், ஐ.ஐ.டி கல்வி வளாகமும் அனுமதியளிக்கும்படி இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கேட்டுக் கொள்கின்றது. இதனை வலியுறுத்தி இன்று (2/06/15) மாலை 4:30 மணிக்கு உக்கடத்தில் வைத்து தடையை மீறி போராட்டம் நடைபெற இருக்கிறது.

ஞாயிறு, 17 மே, 2015

மழை எப்படி உருவாகிறது?

                

         குழந்தைகள் மழை காதல், முதியவர்கள், மழை அனுபவிக்க விரும்புகிறேன். மழை இயற்கையின் ஒரு அழகான விஷயம்! மழை சூடான காலநிலை குளிர்விக்கிகிறது மற்றும் சூடான வெப்பநிலை குறைக்கிறது! பயிர்கள் வளர மழை அவசியம்.நீங்கள் எப்போதாவது மழை உருவாக்கப்பட்டது எப்படி யோசித்திருக்கிறீர்களா? என்ன மழை என்ன செய்கிறது?எனவே, மழை என்ன? மழை காற்று நீர்த்துளிகள் வேறில்லை! நீர், காற்று நீராவி ஆகிறது மற்றும் காற்று மூலம் சேதமடைந்தது போது, அது மீண்டும் மழை வடிவத்தில் நீர் ஆகிறது.

            வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர். 

மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்லதேவை இல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.

     
              Science Experiment about Rain


உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.

இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை என்பதை சந்தேகமின்றி என்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே செல்வோம்.
கடவுள் மறுப்பாளர்கள் கூற்றுப்படி முதல் மழை எப்படி பெய்திருக்கவேண்டும், இயற்கையாக (!?) உருவான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தானாக ஒன்றிணைந்து நீர்த்துளி உருவாகி பின் ஒவ்வொரு நீர்துளியாக அதிகமாகி கடல் உருவாகி இருக்க பிறகு பூமியிலுள்ள வெப்பத்தின் காரணமாக அவைகள் தங்களின் தன்மையை அதாவது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு தானாக (!?) மாற்றி மேல் சென்று பிறகு பூமிக்கு தரவேண்டும்.

இவை அனைத்தும் தானாக உருவாகி இருக்குமானால் எப்படி இருக்கும் தெரியுமா? மேகம் எங்கு நீர் எடுக்கிறதோ அங்கு மட்டும் தான் மழை உருவாக வேண்டும், கடல், ஏரி, ஆறு போன்று நீர் உள்ள இடங்களிலிருந்து மேகம் நீர் எடுக்கிறது, உதாரணமாக கடல் நீர் மேகமாக மாருமானால் மழை கடலில் மட்டும் தான் பெய்யவேண்டும், அவ்வாறா நடக்கிறது இப்பூவுலகில், அதற்காக கடவுள் கொடுத்த ஒரு அமைப்புதான் காற்றில் மேகம் நகருதல்,எங்கிருந்து அது நீர் எடுத்தாலும் சுழன்று கொண்டு அனைத்து இடங்களுக்கும் மழையை தருகிறது, நம் ஊரில் உள்ள தண்ணீர் வண்டி என்ன செய்கிறது, அசுத்தமான நீரை சுத்தபடுத்தி அதை ஒரு வண்டியில் ஏற்று ஊர் முழுவதுமாக வளம் வருகிறது எங்கு தண்ணீர் வேண்டுமோ அங்கு அளிக்கிறது, இதே வேலையை செய்யத்தான் மழை என்ற ஒன்றை கடவுள் ஏற்படுத்தி தேவை படும் இடங்களில் பொழிய செய்கிறார், இந்த அமைப்பு எதற்காக நடக்கிறது அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக.

       

மேகத்தின் வேகம் என்பது இந்த பூமி சுழற்சியின் வேகத்தைவிட அதிகம் என்று கூட கூறலாம், ஏனெனில் பூமி தான் சுற்றும் போது தன்னுடைய வலிமண்டலதையும் இழுத்துக்கொண்டு சுற்றுகிறது, மேகம் என்பது பூமியின் வலிமண்டலத்தில் தான் உள்ளது. உதாரணமாக ஒருவர் மணிக்கு 10 கி மி வேகத்தில் நடக்கிறார் என்றால் அவர் உண்மையில் பூமியின் சுழற்சியையும் (529.75 kmph) சேர்த்து 539.75 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்று தான் பொருள், இதை இங்கு நாம் குருப்பிடுவதற்கான காரணம் பூமிதான் சுற்றுகிறதே மேகம் எதற்காக நகர வேண்டும், அப்படி நகராமல் ஒரே இடத்தில் இருந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா தண்ணீர் இருக்கும் இடங்களில் மட்டுமே மழை கிடைக்கும், அப்படியெனில் உயிரினங்கள் இருக்குமா, நாம் தற்போது இருப்பது போன்ற எந்த குறையும் இல்லாமல் வாழ முடியுமா? இந்த தத்துவத்தை பார்க்கும், சிந்திக்கும் ஒரு மனிதன் என்ன உணருவான் இப்பூமியில் உயிரினங்களை வாழவைக்க மறைமுகமாகவோ அல்லது நேராகவோ ஒரு சக்தி உதவுகிறது என்று அடிப்படை நிலையை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும், இல்லையெனில் மேகம் எதற்காக நகரவேண்டும் மழை எதற்காக பொழிய வேண்டும், இது போன்ற நாம் உணரவே முடியாத இவ்வுலகையும் இந்த தத்துவங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியை அரைகுறையாக கூட உணரமட்டோம்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போதைய அறிவியல் படி மழை பெய்ய மேகம் உருவானால் மட்டுமல்லாமல் ஏர்பான் (Airborne) என்ற ஒரு வகையான பாக்டீரியாவின் பங்கும் அதிகம் உள்ளதாம். உயிர்களை வாழவைக்க உதவுவது நுண்ணுயிரிகள், பூமியில் நீர் இல்லையெனில் உயிரினங்கள் இல்லை, நீர் இல்லையெனில் கடல் இல்லை, கடல் இருந்தாலும் வெப்பம் இல்லையெனில் மேகம் இல்லை, மேகம் இருந்தும் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் மழை இல்லை. சுருங்க சொல்வதென்றால் ஒன்றில்லையேல் ஒன்றில்லை என்ற மிகவும் சிக்கலான ஆயிரக்கணக்கான அமைப்பை வைத்து கொண்டு இதுதான் முதலில் வந்தது அதுவும் தானாக வந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு அறிவுடையதாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

 

பொதுவாக வெள்ளம் வறட்சி ஏற்படுதல் என்பது எப்போது என்பது நாம் அறிந்ததே இயற்கைக்கு முரணான (அதாவது உலக அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொழுது) இவைகள் நடைபெறும், குளோரோ ப்லோரோ கார்பன் அதிகமாக வெளியிடும் பொழுது, ஒரே இடத்தில் சுரங்கம் தண்டவாளம் போன்றவைகளுக்காக குண்டு வெடிப்புகளால் தொண்டபடுதல் போன்ற இயற்கை அமைப்பை சிதைக்கும் போதுதான் நமக்கு வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பெரிய பாதிப்புகள் நடைபெறும். இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது மேலே குறுப்பிட்ட இந்த இயற்கை அமைப்பு என்பது எவ்வாறு ஏற்பட்டது. தானாக உருவான ஒன்று அதன் அமைப்பை மாற்றும் போது எதற்காக எதிர்மறை விளைவை ஏற்படுத்த வேண்டும். சாதரணமாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தாத அமைதியான அமைப்பை அது எப்படி பெற்றது என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும். இவைகள் அனைத்தும் நடப்பது ஒரு காரணம் இல்லாமலா? இதை பார்க்கும் போதே தெரியவில்லையா ஒரு சக்தி தான் இதை இயக்குகிறது என்று.

மழை எதற்காக பெய்கிறது என்று யாரிடமாவது கேட்டால் அதற்கு பதில் உயிரினங்களுக்காக என்றுதான் கூறுவார்கள், இது உலகில் அனைவரும் அறிந்த நியதி என்று கூட கூறலாம், இணையத்தில் மழை ஏன் பெய்கிறது என்ற கேள்வியை பற்றி தேடினால், எப்படி உருவாகிறது எங்கிருந்து பெய்கிறது, என்னென்ன வகைகள் அதில் உள்ளன என்ற பதிலெல்லாம் கிடைத்தது, என்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்னுடைய கேள்வி:

மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.

“அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா – நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல் குர்ஆன் 32 : 27)

எகிப்து நாட்டின் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை















எகிப்து நாட்டின் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை


முகமது முர்சி 

எகிப்து நாட்டில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரைப் பெற்றவர் முகமது முர்சி. ஆனால் அவரது மக்கள் நல கொள்கைகளால், அவருக்கு எதிராக கார்பொரேட் ராணுவ கிளர்ச்சி வெடித்தது. இதையடுத்து கடந்த 2013–ம் ஆண்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இந்த நிலையில் 2011–ம் ஆண்டு, அப்போதைய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின்போது ஜெயில் உடைப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 128 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கில் கெய்ரோ ராணுவத்திற்கு ஆதரவான கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

மரண தண்டனை 

முர்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஷபான் அல் ஷமி தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை பெற்றவர்களில், முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பின் தலைவர் முகமது பதீஃ, துணைத்தலைவர் கைரத் அல்–ஷேட்டர், இஸ்லாமிய மத அறிஞர் யூசுப் அல்–கர்ளாவி ஆகியோரும் அடங்குவர். இந்த தண்டனையை உறுதி செய்வதற்காக, அந்த நாட்டு வழக்கத்தின்படி, ‘கிராண்ட் முப்தி’ என்னும் முஸ்லிம் மத தலைவர்களை கொண்ட அமைப்புக்கு நீதிபதி வழக்கை அனுப்பி வைத்தார். அந்த அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு கூட குற்றவாளிகள்(!) அப்பீல் செய்யலாம். ‘முப்தி’ அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு, ஜூன் 2–ந்தேதி, இவ்வழக்கில் கோர்ட்டு தனது இறுதி முடிவை அறிவிக்கும்.

முஷ்டியை உயர்த்தினார் 

நீதிபதி தீர்ப்பு அளித்தபோது, முர்சி தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கை முஷ்டியை உயர்த்திக் காண்பித்தார். அவர், குற்றவாளிகளுக்கான நீல நிற சீருடையுடன் கூண்டில் அமர்ந்திருந்தார்.
முர்சி விரும்பினால், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்று அவருடைய வக்கீல் அப்துல் மோனிம் தெரிவித்தார். 2012–ம் ஆண்டு அதிபர் மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அடக்க உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முர்சி, ஏற்கனவே 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்து அரசை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்ததாக முர்சி உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், ஜூன் 2–ந்தேதி கோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது. (அவருதானையா அப்ப அரசாங்கம் னு நீங்க சொல்றது கேக்குது)

3 நீதிபதிகள் சுட்டுக்கொலை 

இந்நிலையில், கெய்ரோ கோர்ட்டில், முர்சிக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு சினாய் மாகாண தலைநகர் எல்–அரிஷில், ஆயுதம் தாங்கிய ஒரு மர்ம கும்பல், நீதிபதிகளை குறிவைத்து துப்பாக்கி தாக்குதல் நடத்தியது. இதில், 3 நீதிபதிகள் பலியானார்கள். மேலும் இரண்டு நீதிபதிகள் காயம் அடைந்தனர். முர்சியுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சிலர் சினாய் மாகாணத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவர். எனவே, அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கண்டனம் 

இதற்கிடையே, முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதித்தற்கு ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் எதிரிகளை பழிதீர்க்க மரண தண்டனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. துருக்கி நாட்டு அதிபர் ரெசிப் தய்யிப் எர்டோகனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கற்கால எகிப்துக்கு நாடு திரும்பி வருவதாகவும், மேலை நாடுகள் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.