U. முஹம்மத் அலி அவர்கள்
கல்வித்துறையில் நிகழும் அநீதி மற்றும் சமநிலையின்மையைக் கண்டித்து
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி வழங்குவது அரசின்
கட்டாயக் கடமை. அப்படியான ஒரு திட்டத்தைதான் நாடு விடுதலை அடைந்த
தருணத்தில் சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களும் கல்வி அமைச்சர் அபுல் கலாம்
ஆசாத் அவர்களும் முன் வைத்தனர். வேறு சிலரின் சூழ்ச்சியால் அத்திட்டம்
கைவிடப்பட்டது.
60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அனைவருக்குமான கல்வி
இந்தியாவில் சாத்தியம் இல்லாமல் போயிற்று. 2010ல் மன்மோகன் சிங்கின்
தலைமையின் கீழ் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE)
நடைமுறைக்கு வந்தது. ஆனால் இதுவரையிலும் மத்திய மாநில அரசுகள் இதை
நடைமுறைப்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் நாட்டில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் வேண்டும்.
1:30 என்ற ரீதியில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம்
பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை ஏற்படிதியிருக்க வேண்டும். இப்படியான ஒரு
ஏற்ப்பாடு இருந்தால் தான் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி
யோசிக்கவே முடியும். ஆனால், எதனையும் ஏற்படுத்தாமல் சட்டத்தை மட்டும்
இயற்றி என்ன பயன்.
இன்னொரு பக்கம் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தனியார் பள்ளிகளில்
ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டினை வாங்கித் தர அரசு ஏற்பாடு செய்தது.
ஆனால், அதற்கான எந்த ஒரு நிதியினையும் மத்திய மாநில அரசுகள் கொடுக்கவில்லை.
வணிக நோக்கில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தனியார் பள்ளிகள் இனி வரும்
கல்வி ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க முடியாது
என்று கூறிவிட்டது. ஆக மொத்தத்தில் கல்வி இலவசமாக வழங்கப்படவில்லை என்பது
வெளிப்படையான உண்மை.
ஒரு அரசு தன் நாட்டு மக்களை சிறந்த நிபுணர்களாக மாற்ற கல்வியைத் தரமாக வழங்க வேண்டும்.
அதனை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. கல்வி வழங்குவதை தனியாருக்குத்
தாரை வார்த்தால் “பணம் படைத்தோருக்கு மட்டுமே கல்வி” என்ற வணிகமயமாக்கலின்
இழிநிலையை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்க வேண்டும் என்பது கண்கூடு.
அரசு பள்ளிகளின் தரத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி அரசுப்
பள்ளிகளின் எண்ணிக்கையை கூட்டினால் மட்டுமே அனைவருக்குமான தரமான இலவச கல்வி
நடைமுறை சாத்தியமாகும்.
இத்தகைய திட்டங்களை வலியுறுத்தி வருகின்ற
16.05.2015 அன்று காலை 10.30 மணியளவில் உக்கடம் அருகில் கவன ஈர்ப்பு
ஆர்பாட்டத்தை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO கோவை நடத்தியது.
நன்றி,
முஹம்மது அலி MBA
செயலாளர்,
மக்கள் தொடர்பு,
SIO கோவை.